கண்டி பேராதனைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கினிகத்தேனையை சேர்ந்த 22வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்து தொடர்பாக பேராதனைப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.